ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட ராகுல் விருப்பம்: எம்எல்ஏ சொன்ன சீக்ரெட்!

ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட ராகுல் விருப்பம்:  எம்எல்ஏ சொன்ன  சீக்ரெட்!

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் ராகுல்காந்தி சைக்கிள் ஓட்ட விருப்பம் தெரிவித்துள்ளதாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் செல்வபெருந்தகை கூறினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் சைக்கிளில் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் சைக்கிளில் செல்லும் படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படும். இந்த நிலையில் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது, விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் செல்வபெருந்தகை பேசினார். அப்போது, " போதி தர்மரின் மரபணுவில் வந்தவர் தான் முதல்வர் ஸ்டாலின். அவரின் உங்களின் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ராகுல்காந்தி, ஸ்டாலினின் வயது குறித்து என்னிடம் கேட்டார். அதற்கு, ஸ்டாலின் வாரம் தவறாமல் சைக்கிள் ஓட்டி வருவதாக அவரிடம் கூறினேன். அடுத்த முறை தமிழகம் வரும் போது ஸ்டாலினுடன் நானும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற விருப்பதை ராகுல் காந்தி என்னிடம் தெரிவித்தார்" என்று செல்வபெருந்தகை பேசினார்.

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ராகுல்காந்தி சைக்கிளில் பேரணி சென்றார். அந்த படம் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in