புரட்டாசி மாதம் நிறைவு; மீன் மார்க்கெட்டில் குவிந்த அவைசப் பிரியர்கள்!

புதுச்சேரி மீன் அங்காடி
புதுச்சேரி மீன் அங்காடி

புரட்டாசி மாதம் நேற்றுடன் நிறைவடைந்ததால் இன்றைய தினம் அசைவ பிரியர்களில் பெரும்பகுதியினர் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடைகளில் குவிந்தனர்.

மீன் வரத்து அதிகரிப்பு
மீன் வரத்து அதிகரிப்பு

ஒரு மாத காலமாக புரட்டாசி என்பதால் பெரும்பாலானோர் அவைசம் சாப்பிடுவதை தவிர்த்து வந்தனர். இதனால், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் அங்காடிகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில், நேற்றுடன் புரட்டாசி முடிந்துவிட்டதால் இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளில் மக்கள் காலை முதலே குவிந்து தங்களுக்குத் தேவையான அசைவ ஐட்டங்களை வாங்கிச்செல்கின்றனர்.

மீன் வரத்து அதிகரிப்பு
மீன் வரத்து அதிகரிப்பு

புதுச்சேரியில் மாநிலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் மார்க்கெட்டிற்கு இன்று மீன் வரத்து அதிகமாக இருந்தது. இங்கு ஏராளமான வியாபாரிகள் குவிந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர். கொடுவா, சங்கரா, வாளை, வஞ்சிரம், வவ்வா, இறால், கனவா போன்ற மீன் வகைளின் வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல், அதிகாலை முதலே மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான மீன்களை வாங்கிச்செல்கின்றனர்.

இதனிடையே, புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் அங்காடி சுகாதாரக் குறைவுடன் அசுத்தமான சூழலில் காணப்படுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது என மீன் வியாபாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in