
புதுச்சேரியில் கழிவு நீர் கால்வாயில் முதலை இருப்பதை அறிந்து அங்கு நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி காமராஜர் சாலை உப்பனாறு கழிவுநீர் வாய்க்காலில் இன்று காலை முதலை இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல்கள் பரவியது. மேலும் இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியதால் நூற்றுக்கணக்கானோர் முதலையைக் காண காமராஜர் சாலையில் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பும், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்நிலையில், கழிவுநீர் வாய்க்காலில் முதலை இருக்கும் தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு, ஜான் குமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அத்துடன் வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரி வஞ்சுள வள்ளி தலைமையிலான வனத்துறையினர் கால்வாயில் முதலை இருப்பதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த வனத்துறை அதிகாரி வஞ்சுள வள்ளி, வாய்க்காலில் முதலை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், அதனைப் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த முதலை வெல்லவாரி வாய்க்காலில் இருந்து வந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். கழிவுநீர் கால்வாயில் முதலை இருக்கும் தகவல் அறிந்த அந்தப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக முதலையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை
உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!
மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!
கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு