
தீபாவளிக்கு மறுநாள் நவ 13 ம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பணி நிமித்தமாக வந்து வசிப்பவர்களே. அவர்கள் அனைவருமே பண்டிகைக் காலம் என்றால் சொந்த ஊருக்கு செல்வதையே விரும்புகின்றனர். இதனால் பண்டிகை காலங்களில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அவையெல்லாம் நிரம்பி தனியார் ஆம்னி பேருந்துகளிலும் ஆயிரக்கணக்கான ரூபாயை இழந்து மக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அப்படி அரக்கப்பரக்க இந்த தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்கள் தீபாவளி அன்று இரவே புறப்பட்டால்தான் மறுநாள் பணிக்கு செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது அவர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அதாவது நவம்பர் 13 ம் தேதி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி அன்று இரவுதான் கொண்டாட்டங்கள் களை கட்டும் என்பதால் அதை இழந்து விட்டு சென்னை திரும்ப வேண்டுமா என்று மக்கள் யோசிக்கிறார்கள். அதனால் மறுநாள் திங்கட்கிழமை மட்டும் அரசு பொது விடுமுறை அறிவித்தால் அது அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!
பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ
டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!