போராடிய 800 செவிலியர்களுக்கு அமைச்சர் கொடுத்த வாக்குறுதி

போராடிய 800 செவிலியர்களுக்கு அமைச்சர் கொடுத்த வாக்குறுதி

கரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 800 செவிலியர்களை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

கரோனா காலத்தில் 2020-ம் ஆண்டு 3,200 செவிலியர் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் 2,400 பேர் நிரந்தர ஒப்பந்த செவிலியராக பணியமர்த்தப்படுவதாகவும், மீதமுள்ளவர்கள் எதிர்காலத்தில் காலியிடங்களுக்கேற்ப பணியமர்த்தப்படுவார்கள் என்றும் பேச்சுவார்த்தையின்போது மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நிதிப் பற்றாக்குறை காரணமாக 800 செவிலியர் மார்ச் 31-ம் தேதியுடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 800 செவிலியரும் படிப்படியாக பணியமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in