ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்: கெடிலம் சம்பவம் குறித்து பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே ஏ. குச்சிபாளையம் என்ற ஊரைச் சேர்ந்த 4 சிறுமிகள் உள்ளிட்ட ஏழு இளம்பெண்கள் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

'கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்; அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரி, தடுப்பணைகள் மற்றும் குளங்களில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணைகளில் குளிப்பதற்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆர்வ மிகுதியால் தடையை மீறி இறங்கி குளிக்கும்போது உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன.

எனவே மக்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க முற்படுவதை, பெற்றோர்கள் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது' என்று கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in