அம்பேத்கருக்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

அம்பேத்கருக்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பாபா சாகேப் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, சபாநாயகர், மத்திய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அம்பேத்கரின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதல்வர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர், சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க பாடுபடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.