மேகேதாட்டு விவகாரம்... மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம்... அறிவித்தார் பி.ஆர்.பாண்டியன்!

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை வரும் மே.2ம் தேதி முற்றுகையிடவுள்ளதாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

திருச்சியில் தமிழ்நாடு அளவில் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம், மூத்த விவசாயிகள் சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் போராட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான பிஆர் பாண்டியன் பங்கேற்றார்.

மேகேதாட்டு
மேகேதாட்டு

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பி ஆர்.பாண்டியன், "காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில 22 லட்சம் ஏக்கர் சாகுபடி பெறுகிறது. சென்னை உட்பட 12 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழக்கூடிய ஐந்து கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி நீர் விளங்குகிறது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் சட்ட விரோதமாக மத்திய அரசு பிரதிநிதிகள் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் ஆணையம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

சட்டவிரோதமாக செயல்படும் கர்நாடக அரசுக்கு துணை போகும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும் வரும் மே 2ம் தேதி தஞ்சாவூர் காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம். இப்போராட்டத்தில் பலஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். தொடர் போராட்டங்களை தீவிரப்படுத்த 15 பேர் கொண்ட காவிரி மேகேதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட போராட்டத்தை தஞ்சாவூரில் அறிவிப்போம். தொடர்ந்து போராட்டத்தை தீவிரப் படுத்துவோம்" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in