கேரளாவில் தமிழர் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்றது கேரள அரசு
கேரளாவில் தமிழர் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை
முதல்வர் மு.க.ஸ்டாலின்

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லையையொட்டியுள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரளப் பகுதிகளில், பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் தமிழர் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.

இந்தப் பகுதியில் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட, நாளை(ஜன.14) பொங்கல் விடுமுறை அறிவிக்க வேண்டி, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, 6 மாவட்டங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறையாக பொங்கல் விடுமுறை அறிவித்துள்ளது கேரள அரசு. முன்னதாக, கேரளாவில் ஜன.15-ம் தேதி பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.