பிளஸ்2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது சுகாதாரத்துறை

பிளஸ்2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது சுகாதாரத்துறை

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் தேர்வர்கள், ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில் தேர்வு மையங்கள் மற்றும் வகுப்பறைகளில், மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார். அனைத்து துணை சுகாதார ஆணையர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்து தேர்வு மையங்கள் மற்றும் வகுப்பறைகள் தேர்வுக்கு முன்பும், பின்பும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

இரண்டு இருக்கைகளுக்கு இடையே கட்டாயம் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். அனைத்து நுழைவு பகுதிகளிலும் வெப்பநிலையை சோதிக்கும் கருவி பள்ளி நிர்வாகத்தினால் வைக்கப்பட்டு மாணவர்களின் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட வேண்டும். அனைத்து நுழைவு பகுதிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பாட்டிற்காக கிருமிநாசினி வைக்கப்படவேண்டும். போதுமான அளவு முகக்கவசத்தை பள்ளி நிர்வாகம் கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

கோவிட் தோற்று பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பி.பி.இ கிட் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்வு அறையினுள் மாணவர்கள் உள்ளே நுழையும்போது சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக தரைப்பகுதியில் குறியீடு இடப்பட்டிருக்க வேண்டும். அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு பி.பி.இ கிட் கொடுத்து தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

மாணவர்கள் தேர்வுக் கூடத்தில் நுழையும் முன் கிருமிநாசினி பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து நுழைவு பகுதிகளிலும் மூன்று அடுக்கு முககவசம் வழங்கப்பட்டு, அதை மாணவர்கள் சரியாக போட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்த உத்தரவை அனைத்து துணை சுகாதார ஆணையர்கள், மாநகர, நகர சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.