இனி சொத்துகளின் புகைப்படம் முக்கியம்! தமிழக பதிவுத்துறை அதிரடி உத்தரவு

இனி சொத்துகளின் புகைப்படம் முக்கியம்! தமிழக பதிவுத்துறை அதிரடி உத்தரவு
Updated on
1 min read

பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க பதிவுத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும்போது நிலம், வீடுகளின் புகைப்படத்தை சேர்ப்பதில்லை. இதனால் சிலர் வீடுகளை பத்திரப்பதிவு செய்யும்போது காலிமனை என்று கூறி பதிவு செய்துவிடுகிறார்கள். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வருவாய் இழப்பை தடுக்க தமிழக பத்திரப்பதிவு துறை அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க பதிவுத்துறை இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் இணைக்க வேண்டும். இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in