இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!

இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. சென்னையில் கடந்த 11 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.56, டீசல் விலை ரூ.7.61 உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், நடுத்தர மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த விலை ஏற்றம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

ஏற்கனவே, வர்த்தக கியாஸ் சிலிண்டரின் விலை புதன்கிழமை 40 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 240 ரூபாய் உயர்ந்தப்பட்டது. இதனால் தேநீர், காபி மற்றும் உணவுப் பொருட்களின் விலையும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்துள்ளது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.96க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.04க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in