`பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார்'- முதல்வர் ஸ்டாலின்

`பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார்'- முதல்வர் ஸ்டாலின்

"பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்காமல் அடம்பிடிப்பதால், மக்களுக்கு அதிக சுமை ஏற்படுவதாகவும் பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேசியபோது குற்றம்சாட்டினார். இந்த நிலையில் பிரதமரின் இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுபோல் இந்த கருத்தை பிரதமர் எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்றும் பெட்ரோல் விலையை குறைப்பது போல நடித்து மற்றவர் மீது பழியை போடுவது யார் என மக்களுக்கு தெரியும் எனவும் கூறினார்.

பெட்ரோல் விலையை குறைத்தது யார்? ஏற்றியது யார்? என்பதை மக்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன் என்று தெரிவித்த முதல்வர், கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடுமையாக வரி உயர்த்தியது என்றும் சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது என்பதற்காக விலையை உயர்த்தாமல் இருந்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in