சென்னையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை!
parvesh kumar

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதன் விளைவாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.

பெட்ரோல் மீதான கலால் வரியில் 8 ரூபாய், டீசல் மீதான கலால் வரியில் 6 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாயைக் கடந்தும், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசின் விலைக் குறைப்பால் சென்னையில் பெட்ரோல் விலை 8.22 குறைந்து 102.63 ரூபாயாகவும், டீசல் 6.70 விலை குறிக்கப்பட்டு 94.24 ரூபாயாகவும் உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றாலும் ஐந்து மாநிலத் தேர்தல் முடியும் வரை விலை உயர்த்தாமல் வைத்திருந்த எண்ணெய் நிறுவனங்கள், அதற்குப் பிறகு மளமளவென உயர்த்தியதில் கடந்த சில நாட்களில் 10 ரூபாய்க்கும் மேல் விலை உயர்ந்தது. தற்போது அதிலிருந்து பெட்ரோலுக்கு 8.22 ரூபாயும், டீசலுக்கு 6.70 ரூபாயும் குறைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in