மகளிர் உரிமைத் தொகைக்கு ஓய்வூதியம் பெறும் குடும்பப் பெண்களும் விண்ணப்பிக்கலாம் - புதிய அறிவிப்பு!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாற்றுத் திறனாளி, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்ற புதிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டத்தை செப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக இதுவரை 1.54 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிதித் துறை செயலாளர் உதயசந்திரன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் குமரகுருபரன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியாகி உள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் இன்று கலைஞர் உரிமைத்தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளை வரையறை செய்து ஏற்கனேவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் கீழ் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும் இந்தத் திட்டத்தில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை அளிக்கப்பட்டது.

ரூபாய் 1000 - மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு முகாம்
ரூபாய் 1000 - மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு முகாம்

இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் வருவாய்த்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் உரிமைத் திட்டத்தின் பயன்பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்க ஆணையிட்டுள்ளார். 22.07.2023 ல் நடந்த அமைச்சரவை கூட்ட முடிவின்படி இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப்பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், மேலும், இலங்கை அகதிகளுக்கான (முதியோர், ஆதரவற்ற விதவைகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்) ஓய்வூதிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களின் ஓய்வூதியத்தை ரூ1,200் ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் ஒரு நபர், சமூக பாதுகாப்பு திட்டங்களிலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்ததால் அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயன்பெற இயலாது என்று திட்ட விதி வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதல்வர் விரிவாக ஆய்வு செய்தார்.

மகளின் உரிமை திட்டம் முகாமில் முதல்வர் ஸ்டாலின்
மகளின் உரிமை திட்டம் முகாமில் முதல்வர் ஸ்டாலின்

முதியோர் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த அரசு முதியோர் ஓய்வூதியத்தை வழங்குகிறது. முதியோரை பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின் கடமை மட்டுமல்ல, சமூகத்தின் கடமை என்று அரசு கருதுகிறது. அதே வேளையில் அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால் அந்த குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் மகளிர் உரிமைத் திட்டத்தின் பலன்பெறுவது தடைப்படக்கூடாது என முதல்வர் ஆணையிட்டுள்ளார். எனவே இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதி தேசிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகள், முதியோர் ஓய்வூதிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்ப தலைவிகள் விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 18,19, 20ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த தினங்களில் இவர்கள் விண்ணப்பிக்கலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in