பெண்கள் இனி பயப்பட வேண்டாம்: அரசு பஸ்களில் பேனிக் பட்டன், சிசிடிவி கேமராக்கள்

பெண்கள் இனி பயப்பட வேண்டாம்: அரசு பஸ்களில் பேனிக் பட்டன், சிசிடிவி கேமராக்கள்

அரசுப் பேருந்துகளில் பேனிக் பட்டன், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கையர்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் 500 மாநகரப் பேருந்துகளில் பேனிக் பட்டன் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே சிசிடிவி கேமரா வசதி, பாதுகாப்பு சாதனமும் பொருத்தப்பட்டுள்ளன. நிர்பயா திட்ட நிதியை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள இந்த வசதிகள், மேலும் 2,800 மாநகரப் பேருந்துகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளன.

இந்த பேனிக் பட்டனை ஒருமுறை அழுத்தினால், அது எச்சரிக்கையை மாநகர போக்குவரத்து அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும். பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை 24 மணி நேரமும் ஒரு குழுவானது கண்காணிக்க உள்ளது. அபாய நேரத்தில் காவல்துறை உதவி எண்ணுக்கு (100) அந்த குழு எச்சரிக்கையை உடனே அனுப்பிவிடுவதோடு, அவர்கள் அருகில் உள்ள ரோந்து காவல்துறையினர் எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றுவிடுவார்கள். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in