தலைக்கு மேலே மின்கம்பி; வேலை மும்முரத்தில் கவனிக்காத பெயின்டர்: வேதனை தந்த விபரீதம்!

தலைக்கு மேலே மின்கம்பி; வேலை மும்முரத்தில் கவனிக்காத பெயின்டர்: வேதனை தந்த விபரீதம்!

பள்ளிக்கு வண்ணம் பூசச் சென்ற பெயின்டர், வேலை மும்முரத்தில் தலைக்கு மேலே சென்ற மின் கம்பியைக் கவனிக்காமல் அதை உரசியதால் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் வடலூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் பிரான்சிஸ் ( 28). இவர் கட்டிடங்களுக்கு வண்ணம் பூசம் பணியில் ஈடுபட்டு வருகிறார். இன்று வடலூர் கும்பகோணம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக உயர் அழுத்த மின்கம்பி சென்றது. இதை கவனிக்காமல் பிரான்சிஸ் நிமிர்ந்தபோது அவரது தலை மின்கம்பியில் உரசியது.

இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மின் கம்பியின் மேலேயே அவரது உடல் வெகு நேரம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வந்த வடலூர் போலீஸார் பிரான்சிஸ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in