தமிழ்நாட்டில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்... மழை கொட்டப்போகுது!

மழை
மழை

கோடை வெயில் வெளுத்தெடுத்து வரும் நிலையில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி இறுதியிலிருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயில் மரணங்களும் தனது கணக்கை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மழைக்கான அறிவிப்பை வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ளது. இன்று இரவு 6.30 மணி வரை 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தேனி என 5 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கோவை, ராமநாதபுரம், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சியில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, "தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே, இன்றும் நாளையும், தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை
மழை

மே 7, 8, 9- 1 மற்றும் 11-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அன்று நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in