
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர்க் கண்காட்சி, வரும் 20-ம் தேதி தொடங்கி, 24-ம் தேதிவரை நடக்கிறது. மலர்க் கண்காட்சி தொடங்கும் நாளில், நீலகிரி மாவட்ட மக்கள் கண்காட்சியைப் பார்த்து ரசிப்பதற்கு வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் வேலைநாளாக இருக்கும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பாரம்பரியப் புகழ்மிக்க தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கரோனா தொற்றுப் பரவலின் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மலர்க் கண்காட்சி நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சிக்கு மக்கள் உற்சாகமாகத் தயாராகி வருகின்றனர்.
இந்தக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஆயுத்தப் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டிவருகின்றனர்.