விருதுநகரில் வினோதம்: ஊராட்சி ஊழியர்கள் 6 பேர் மட்டுமே பங்கேற்ற கிராமசபை கூட்டம்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள மேட்டமலை கிராமத்தில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் யாரும் பங்கேற்காததால் ஊராட்சி ஊழியர்கள் ஆறு பேர் மட்டுமே பங்கேற்றுள்ள வினோதம் நடந்தது.
மேட்டமலை ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஒன்றியத்தில் மிகப்பெரிய பஞ்சாயத்து நிர்வாகமாக இந்த ஊராட்சி விளங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று கிராம பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக மேட்டமலை கிராமத்திலும் கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பஞ்சாயத்து செயலாளர் சக்தி இல்லாமல் பஞ்சாயத்து ஊழியர்கள் ஆறு பேரை மட்டுமே வைத்து கிராமசபை கூட்டம் நடந்தேறியது.
ஏற்கெனவே மேட்டமலை கிராமத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பஞ்சாயத்து செயலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு அதன்பின் வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மேட்டமலை பஞ்சாயத்து நிர்வாகத்தின் காசோலை உரிமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு குளறுபடிகள் உள்ள இந்த பஞ்சாயத்தில் கிராமசபை கூட்டம் கூட முறையாக நடைபெறவில்லை. ஊர் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் பஞ்சாயத்து ஊழியர்களை மட்டும் வைத்து நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தை ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இதை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?
அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!
ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!