சிட்டாக பறக்கும் சின்ன வெங்காயத்தின் விலை... பொதுமக்கள் அதிர்ச்சி!

சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயம்

வெகுவாக குறைந்திருந்த வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி தற்போது இரண்டு மடங்காக விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வெங்காயத்தின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருந்தது. சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 200 வரையில் விலை உயர்ந்து விற்கப்பட்டது. இந்த நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன் காரணமாகவும் வட மாநிலங்களில் வெங்காயம் உற்பத்தி அதிகரித்து அறுவடைக்கு வந்ததாலும் வெங்காயத்தின் விலை குறைய ஆரம்பித்தது. சின்ன வெங்காயத்தின் விலை  20  ரூபாய் அளவுக்கு விற்பனையாகி வந்தது.

பெரிய வெங்காயத்தின் விலை 15 ரூபாயாக சரிந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக விலை உயர்ந்து இன்று அதன்விலை  30 ரூபாயாக விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் சில்லறை விற்பனையில் 40 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல, தக்காளி விலையும் 18 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ பீன்ஸ் 60 ரூபாய்க்கும், ஒரு கிலோ கேரட் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட்  20 ரூபாய், பாகற்காய் 15 ரூபாய், சுரைக்காய், கத்திரிக்காய், முட்டைக்கோஸ், முருங்கைக்காய்  ஆகியவை கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகின்றன. காலிபிளவர் 15 ரூபாய்க்கும், சௌசௌ 18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளரிக்காய் 17 ரூபாய்க்கும்,  கருணைக்கிழங்கு 15 ரூபாய்க்கும், இஞ்சி 110 ரூபாய்க்கும், மிளகாய் 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 20 ரூபாய்க்கும், கோவைக்காய்  25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in