கனமழையால் நீடிக்கும் கடுங்குளிர்... நீலகிரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மழை
மழை

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதன் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மலைகளின் அரசி எனப்படும் கோடை வாசஸ்தலமான  உதகையிலும்,  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. அங்கு எப்போதும் மேகமூட்டத்துடன் ரம்மியமான காலநிலை நிலவி வந்தது. இதனால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக லேசாக பெய்து வந்த மழை, நேற்று இரவு தீவிரமடைந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சேர்ந்தது. எங்கும் நீர் சூழ்ந்து இருந்ததால்  கடுங்குளிர் நிலவுகிறது.

சேரிங் கிராஸ், படகு இல்லம், மத்தியப் பேருந்து நிலையம், பிங்கர் போஸ்ட், காந்தள், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கடுங்குளிர் நிலவுகிறது. இன்று காலையிலும் அந்த  குளிர் விலகாமல் தொடர்வதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

இந்த மழை மற்றும் குளிர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்றாலும், மலைத்தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள  காய், கனிகளுக்கு உகந்தது என்பதால் அவற்றைப்  பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in