10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்!

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்
Updated on
2 min read

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

வினா வங்கி புத்தக வெளியீட்டு விழா
வினா வங்கி புத்தக வெளியீட்டு விழா

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வினா வங்கி புத்தக வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட வினா வங்கி புத்தகத்தினை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் 2 லட்சம் வினா வங்கி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்களின் உதவியோடு அனைத்து மாவட்டங்களிலும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வினா வங்கி புத்தக வெளியீட்டு விழா
வினா வங்கி புத்தக வெளியீட்டு விழா

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. சென்னையில் வழங்கப்பட்டது போல அங்கும், இணை இயக்குநர்களின் உதவியோடு பள்ளிகள் சீரமைக்கப்பட்டு மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும். அங்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த மழையானது தற்போது சற்று குறைந்துள்ளது. இதன் பிறகு பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கணக்கிடப்பட்டு உடனடியாக சீரமைக்கப்படும்.

மழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட பள்ளிகளில் பாதுகாப்பான சூழல் திரும்பிய பிறகு மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் . 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பள்ளிகளில் பாடத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருந்தால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...


இன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் சனிபகவான்... திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்!

2023 Rewind | மனதை உலுக்கிய மரணங்கள்... மீளா துயரில் ஆழ்த்திய பிரபலங்கள்!

கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இளம்பெண்!

அதிர்ச்சி... கொசுமருந்தை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

குட் நியூஸ்... அரிசி விலை குறையப்போகிறது; மத்திய அரசின் ஏற்பாடுகள் தீவிரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in