காசிருந்தா எல்லாத்தையும் வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா... ஆதரவற்றோர் இல்லத்தில் கண்கலங்கிய ஆட்சியர்!

கண்கலங்கிய நீலகிரி ஆட்சியர் அருணா
கண்கலங்கிய நீலகிரி ஆட்சியர் அருணா

நீலகிரியில் ஆதரவற்ற முதியவர்கள் தாயின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடலுக்கு நடனமாடியதை கண்டு மாவட்ட ஆட்சியர் அருணா கண்கலங்கிய சம்பவம் வைரலாகியுள்ளது.

நீலகிரி ஆட்சியர் அருணா
நீலகிரி ஆட்சியர் அருணா

நீலகிரி மாவட்டம் மேல்கூடலூரில் ஆதரவற்ற முதியவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அம்மாவட்ட ஆட்சியர் அருணா கலந்துகொண்டார். அப்போது அவர், 100 வயதை கடந்த முதியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், "ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா" என்ற பாடலுக்கு முதியவர்கள் நடனம் ஆடினர்.

ஆயிரம் உறவு உன்னை தேடி வந்தாலும், அம்மாவை போல் ஆகுமா என்ற வரிகள் ஒலிக்கும் போது, மாவட்ட ஆட்சியர் உணர்ச்சி வசப்பட்டு, தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு கண்ணீர்விட்டார். நீண்ட நேரம் தேம்பிய மாவட்ட ஆட்சியரை, அங்கிருந்த முதியவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆறுதல் கூறி தேற்றினர். இந்த சம்பவம் அங்கிருந்த முதியவர்களை மட்டுமின்றி, பலரையும் நெகிழ வைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கண்கலங்கிய நீலகிரி ஆட்சியர் அருணா
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்... அதிர்ச்சி தகவல்!
கண்கலங்கிய நீலகிரி ஆட்சியர் அருணா
பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை
கண்கலங்கிய நீலகிரி ஆட்சியர் அருணா
கிளாமர் லுக்கில் செம கெத்து காட்டும் நயன்தாரா... அசத்தல் புகைப்படங்கள்!
கண்கலங்கிய நீலகிரி ஆட்சியர் அருணா
இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்
கண்கலங்கிய நீலகிரி ஆட்சியர் அருணா
மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in