தமிழக பதிவுத்துறையில் முக்கிய மாற்றம் - அரசு வைத்த புதிய ட்விஸ்ட்!

பத்திரப் பதிவுத்துறை  புதிய அறிவிப்பு
பத்திரப் பதிவுத்துறை புதிய அறிவிப்பு

தமிழக பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கும் வகையில், பதிவுக்கு வரும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்த புகைப்படங்களை ஆவணமாக இணைக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக தமிழக பதிவுத்றை தெரிவித்துள்ளது.

தமிழக பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, பத்திரப்பதிவின்போது, காலியிடம் அல்லது கட்டிடம் ஆகியவற்றுக்கான பதிவுக்கட்டணம் வேறுபாடு ஏற்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது கட்டிடத்தை விட காலியிடத்திற்கு பதிவுக்கட்டணம் குறைவு. இதனால், பலரும் பதிவு கட்டணத்தில் சலுகை பெறும் நோக்கில், கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதிந்து வந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

பத்திரப்பதிவு
பத்திரப்பதிவு

இதை தவிர்க்கும் நோக்கில், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படங்களை கண்டிப்பாக ஆவணமாக இணைத்தல் வேண்டும். இந்த நடைமுறை அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி கூறியிருந்தார். ஆனால் அக்டோபர் 1ம் தேதி ஞாயிறு விடுமுறையாகும். இன்று அக்டோபர் 2ம் காந்தி ஜெயந்தி நாளாகவும் இருந்ததால், அக்டோபர் 3ம் தேதியான நாளை முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

பத்திரப்பதிவு மோசடியை தவிர்க்க நடவடிக்கை
பத்திரப்பதிவு மோசடியை தவிர்க்க நடவடிக்கை

இதன்படி நாளை முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய போகும் சொத்து ஆவணங்களுடன் சொத்துக்கள் குறித்த புகைப்படம் மற்றும் ஜியோ கோ-ஆடினேட்ஸ் உடன் எடுக்கப்பட்டு இணைப்பது கட்டாயமாகிறது. மேலும், அதிகாரிகள் கட்டிடங்களை, காலியிடமாக பதிவு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பத்திரப் பதிவுத்துறை  புதிய அறிவிப்பு
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்!
பத்திரப் பதிவுத்துறை  புதிய அறிவிப்பு
’சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி பரபர..!
பத்திரப் பதிவுத்துறை  புதிய அறிவிப்பு
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
பத்திரப் பதிவுத்துறை  புதிய அறிவிப்பு
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
பத்திரப் பதிவுத்துறை  புதிய அறிவிப்பு
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in