
அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
டிபிஐ வளாகத்தில் பந்தல்கள் அமைத்து இரவு பகலாக குழந்தைகளுடன் ஆசிரியர்கள் தங்கியுள்ளனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்துள்ள நிலையில், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உயர் அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால், 5வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
பள்ளிக்கல்வித்துறை வளாகம் போராட்டகளமாக மாறியுள்ளதால், பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அழைப்பு விடுத்தார். அமைச்சரின் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக டெட் ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை சந்தித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.
இதையும் வாசிக்கலாமே...
புரட்டாசியில் பெருமாளையும், தாயாரையும் இப்படி வழிபட்டால் தரித்திரம் விலகும்!
சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி ஆவேசம்!
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!