நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் மீதான விசாரணை: 2 வாரங்களுக்குத் தள்ளிவைப்பு!

ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல் விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்
நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் மீதான விசாரணை: 2 வாரங்களுக்குத் தள்ளிவைப்பு!

ராஜீவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல் விடுதலை செய்யக் கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் இரு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

இந்த வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. 2018 செப்டம்பர் 11-ம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அந்தத் தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல இந்த வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன், தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு மனுக்களும், தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுக்களின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in