நயினார் நாகேந்திரன், காயத்ரி ரகுராம் பதவி பறிப்பு: பாஜக திடீர் நடவடிக்கை!

நயினார் நாகேந்திரன், காயத்ரி ரகுராம் பதவி பறிப்பு: பாஜக திடீர் நடவடிக்கை!

தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநில துணைத்தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன், கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் ஆகியோரின் பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில், தமிழக பாஜக மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்திருந்த நயினார் நாகேந்திரனிடம் இருந்த மாநில துணைத்தலைவர் பதவியும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பு மட்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து துணைத்தலைவரான வி.பி.துரைசாமி பொதுச்செயலாளராக விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், பழைய பொறுப்பே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் இணைந்த கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக அந்த பொறுப்பு பெப்சி சிவக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊடகப் பிரிவு தலைவராக ரங்கநாயகலு, இளைஞரணி தலைவராக ரமேஷ் சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வினோஜ் பி.செல்வத்திற்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மகளிரணி தலைவராக உமாரதி, எஸ்.சி அணி தலைவராக தடா.பெரியசாமி, எஸ்.டி அணி தலைவராக சிவப்பிரகாசம், சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரண், ஓபிசி அணி தலைவராக சாய்சுரேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.