'முதல்வன்' சினிமா பாணியில் ஸ்டாலின் அதிரடி ஆய்வு!

'முதல்வன்' சினிமா பாணியில் 
 ஸ்டாலின் அதிரடி ஆய்வு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆவடியில் நரிக்குறவர் காலனி பகுதியில் இன்று ஆய்வு செய்தார். இதனை முடித்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்ட ஸ்டாலின் திடீரென அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.

அங்குள்ள சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் அறையில் அமர்ந்து பதிவேடுகளையும், முதல் தகவல் அறிக்கைப் பதிவுகளையும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மகப்பேறு விடுப்பில் சென்றுள்ள பெண் காவலர் புவனேஸ்வரியின் விடுப்பு தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன் காவல் நிலையத்தில் உள்ள கைதிகளின் அறைஉள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

'முதல்வன்' படத்தில் நடிகர் அர்ஜூன் ஒருநாள் முதல்வராக பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி அதிரடி நடவடிக்கை எடுப்பார். அது போல திடீரென முதல்வர், காவல் நிலையத்தை ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.