`மக்களோடு நெருக்கமாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும்'- காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியோருக்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “காவலர்கள் என்றாலே வீர, தீரச் செயல்கள் செய்பவர்கள்தான். அதில் பதக்கங்களை பெறுகிறார்கள் என்றால் மற்ற வீரர்களைவிட முனைப்போடு செயல்படும் வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய அங்கீகாரத்தை நாமும் பெறுவோம் என்ற உறுதியை ஒவ்வொரு காவலர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களின் காவலனாக இருந்து மக்களைக் காத்துச் சிறந்த காவலர்கள் என்ற பாராட்டை வேண்டும். காவல்துறை மக்களோடு நெருக்கமாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும்.

காவல் நிலையங்கள் பொது மக்கள் புழங்கும் பாதுகாப்பு அலுவலகங்களைப் போலச் செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், இன்னொரு கை காவல்துறை என்பதை நான் சட்ட மன்றத்திலே சொல்லி இருக்கிறேன். குற்றங்கள் எந்த சூழலிலும் நடைபெறாத காலத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு காவல் துறை திட்டமிட வேண்டும் என்பதுதான் காவல் துறைக்கு நான் வைக்கும் கோரிக்கை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்தை நோக்கி புதிய புதிய தொழிற்சாலைகள் வருகின்றன என்றால் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதால்தான். மக்களைக் காக்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது. அதேபோலக் காவலர்களைக் காக்கும் கடமை அரசிற்கு இருக்கிறது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in