
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 20ம் தேதி தொடங்கியது. முதல் 10 நாட்கள் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. ஆனால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தில் வட கடலோர மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தடையின்றி மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் மின் தளவாடப் பொருள்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். அதோடு மின் விநியோகம் பாதிப்பு தொடர்பான புகார்களை 9498792987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே…
மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!
'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!
என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!