ஆம்னி பேருந்துகளில் 30 சதவீதம் கட்டணம் குறைப்பு! அமைச்சர் சிவசங்கர் தகவல்

ஆம்னி பேருந்து நிலையம்
ஆம்னி பேருந்து நிலையம்
Updated on
1 min read

தமிழ்நாட்டில் இயங்கிவரும்  ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம்  பேச்சு வார்த்தை நடத்தி 30 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அதைத் தாண்டி  கூடுதலாக கட்டணம்  வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். 

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.  "சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்கும்,  மற்றும் ஏனைய பகுதிகளுக்கு சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

கும்பகோணம் மற்றும் இதர கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக வரும் 9ம்தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்
அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

பொதுமக்கள் அனைவரும் அரசுப் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பேரில் தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து நிர்ணயித்த கட்டணங்களில் இருந்து 30 சதவீதம் குறைப்பு செய்து இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in