‘எங்க ஏரியாவில் கரண்ட் இல்லை’ - ட்விட்டர் பதிவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் சூப்பர் பதில்!

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சார துண்டிப்பு தொடர்பான ட்விட்டர் பதிவு ஒன்றுக்கு தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பதில் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று ஃபேன் என்ற ட்விட்டர் கணக்கில், “கோயம்பேடு ஏரியால தினமும் 1 மணி நேரத்துக்கு மேலேயே கரண்ட் இல்லாம இருக்குது. இபி ஆபிஸ்ல கேட்டா டரிப் ஆகிடுச்சு மரம் விழுந்துடுச்சுனு தினமும் கதை சொல்றாங்க. பிரபாகரன் எம்.எல்.ஏ

சார் இது உங்க தொகுதி தான் கொஞ்சம் கவனிச்சிங்கனா நல்லாருக்கும்” என தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவின் ட்விட்டர் கணக்கு ஆகியவற்றை டேக் செய்திருந்தார். இதற்கு இன்று பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “இனிய சகோதரரே, உங்களின் மின் இணைப்பு எண்ணை தெரிவியுங்கள்..” என தெரிவித்துள்ளார்

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மற்றொரு பதிவில், “சமூக ஊடகங்களில் மின் சம்பந்தமான புகார்களை தெரிவிக்கும் நண்பர்கள், அவர்களது மின் இணைப்பு எண்ணோடு தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க பெரும் உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in