‘அமலாக்கத்துறை என் வீட்டு கதவை தட்டவே வேண்டாம்’ - அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

அமைச்சர் துரை முருகன்
அமைச்சர் துரை முருகன்

அமலாக்கத்துறை என் வீட்டு கதவை தட்ட வேண்டாம், கதவை திறந்தே வைத்திருக்கிறேன் என அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி தந்துள்ளார்.

அமைச்சர் துரை முருகன்
அமைச்சர் துரை முருகன்

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த துரை முருகன், "யார் வேண்டுமானாலும், கட்சியை ஆரம்பிக்கலாம். யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம்" என்று தெரிவித்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின் போது, கே.வி.குப்பத்தில் பேசுகையில், “அமலாக்கத்துறை வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டின் கதவை விரைவில் தட்டும்” எனக் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், அவர்கள் என் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டாம். அந்த கஷ்டம் கூட அவர்களுக்கு வேண்டாம், கதவைத் திறந்தே வைத்திருக்கிறேன் என்றார்.

அமைச்சர் துரை முருகன்
அமைச்சர் துரை முருகன்

பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறியது குறித்துக் கேட்டதற்கு, “அவர் என்ன பொருளாதார நிபுணரா? பெரிய பெரிய வல்லுனர்களே எங்களுக்குச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். மேலும், மக்களவைத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. துரைமுருகன் சொன்னதாகக் கூறி எதையாவது ஒன்று போட்டு குட்டையைக் குழப்பி, கிளப்பி விடுவீர்கள். அதனால், கூட்டணி குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் வரும்” என்று தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in