மேட்டூர் அணையிலிருந்து 1.85 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையிலிருந்து 1.85 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 1.85 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை ஏற்கெனவே அதன் முழுக் கொள்ளவான 120 அடியை எட்டிய நிலையில், இன்று காலை அணைக்கு நீர்வரத்து 1.85 லட்சம் கன அடியாக உயர்ந்தது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறக்கப்படுகிறது. எனவே காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை மற்றும் சுரங்க மின்பாதை வழியாக 21,500 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 1,63,500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in