நிவாரணப் பொருட்களுடன் இலங்கை புறப்பட்டது கப்பல்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

தமிழக அரசின் சார்பில் இலங்கைக்குக் கொடுக்கவிருந்த அத்தியாவசிய நிவாரணப் பொருட்களைச் சென்னைத் துறைமுகத்திலிருந்து தமிழக முதல்வர் கப்பலில் அனுப்பி வைத்தார்.

இலங்கை மக்கள்
இலங்கை மக்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். விலையேற்றம், அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு பிரச்சினைகளால் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இலங்கை அரசின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார். ஆனாலும் அங்குப் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நிலவி வருகிறது.

இந்த நிலையில் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கத் தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி பெற்றது. அதன் அடிப்படையில் தமிழகத்திலிருந்து 123 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருள்களை அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 80 கோடி மதிப்பில் 40000 டன் அரிசி, 15 கோடி மதிப்பிலான பால் பவுடர் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதன் முதல் கட்டமாக 9500 டன் அரிசி, 200 டன் பால்பவுடர், 8.87 கோடி மதிப்பிலான 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருள்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலை அனுப்பி வைத்தார். அடுத்த 48 மணி நேரத்தில் அந்த கப்பல் இலங்கைக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்ட நிவாரணப் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in