ஒருவழியாக மயிலாடுதுறை வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்... வழக்கறிஞர் சுதா போட்டியிடுகிறார்!

மயிலாடுதுறை வேட்பாளர் ஆர்.சுதா
மயிலாடுதுறை வேட்பாளர் ஆர்.சுதா

மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் ஆர்.சுதா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திமுக -  காங்கிரஸ் ஒப்பந்தம்
திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் 23ம் தேதி இரவு வெளியானது.

இதில், திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி தொகுதியில் கோபிநாத், கரூர் தொகுதியில் ஜோதிமணி, கடலூர் தொகுதியில் எம்.கே.விஷ்னு பிரசாத், சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம், விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

காங்கிரஸ் அறிவிப்பு
காங்கிரஸ் அறிவிப்பு

இதையடுத்து நெல்லை மற்றும் மயிலாடுதுறை மற்றும் விளவங்கோடு தொகுதிகளின் வேட்பாளர் பட்டியில் பின்னர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நெல்லை தொகுதியில் ராபர்ட் பரூஸ், விளவங்கோடு தொகுதியில் தாரகை கத்பட் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அடுத்தகட்ட பட்டியல் நேற்று வெளியானது. தமிழகத்தில் மயிலாடுதுறை தொகுதிக்கு யார் வேட்பாளர் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழகத்தில் நாளை வேட்புமனு தாக்கல் நிறைவுறும் நிலையில், இன்று இரவுக்குள் அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இதன்படி சற்றுமுன்னர், மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்.சுதா
ஆர்.சுதா

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற சுதார, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் நீண்ட காலமாக இருந்து வருகிறார் ஆர்.சுதா. இந்நிலையில், மயிலாடுதுறையில் போட்டியிட காங்கிரஸ் தலைமை இவருக்கு வாய்ப்பு அளித்துள்ளது. மயிலாதுறை தொகுதியில் போட்டியிட ராகுல்காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி, மணிசங்கர் ஐயர், நாசே ராமச்சந்திரன் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. இந்த ரேஸில் வழக்கறிஞர் ஆர்.சுதா முந்தியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in