கண்ணகி உருவக் கொடியேற்றி பழங்குடி மக்கள் விரதம்!

கண்ணகி உருவக் கொடியேற்றி
பழங்குடி மக்கள் விரதம்!

தமிழக, கேரள எல்லையான பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஏப்ரல் 16-ம் தேதி சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரி விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

இந்த கண்ணகி கோயிலுக்குச் செல்ல கேரள மாநிலமான குமுளியிலிருந்து பாதுகாக்கப்பட்ட கேரள வனப்பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டிப்பாதையும், கூடலூர் அருகேயுள்ள பளியன் குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கிலோ மீட்டர் நடைபாதையும் உள்ளன.

ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் சித்திரை முழுநிலவு விழாவை முன்னிட்டு பத்து நாட்களுக்கு முன்பாகவே தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் கொடியேற்றம் நடைபெறும். இதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பச்சை மூங்கிலில் கொடிமரம் தயார் செய்து அதில் கண்ணகியின் உருவம் பொறித்த மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடலூர் வனத்துறை ரேஞ்சர் அருண்குமார், கம்பம் கண்ணகி அறக்கட்டளை செயலர் ராஜ்கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இங்குள்ள ஆதிவாசி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் விரதமிருந்து கண்ணகி கோயிலுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.