மதுரை `விசிறித்' தாத்தா காலமானார்

விசிறித் தாத்தா
விசிறித் தாத்தா

மதுரையில் கோயில் திருவிழாவுக்கு வரும் மக்களுக்கு விசிறி விடும் தொண்டு செய்துவந்த விசிறித் தாத்தா காலமானார்.

மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ மூர்த்தி. மதுரையில் இவர் செல்லாத கோயில்கள் இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். சித்திரை திருவிழா முதல் அனைத்து கோயில்களும் வரும் பக்தர்களுக்கு விசிறி வீசி வந்துள்ளார் சுந்தர்ராஜ மூர்த்தி. பக்தர்களின் வியர்வை துளிகளை போக்குவதையே இறைத் தொண்டாக எடுத்துக் கொண்டு விசிறிவிடும் பணியை சுந்தர்ராஜ மூர்த்தி செய்து வந்தார். இதனால் இவரை பக்தர்கள் விசிறித் தாத்தா என்று அழைத்து வந்தனர்.

இந்தநிலையில், முதிர் வயது காரணமாக விசிறித் தாத்தா சுந்தரராஜ மூர்த்தி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்து பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

விசிறித் தாத்தா
விசிறித் தாத்தா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in