சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் சேர வேண்டுமா... ஏப்ரல் 23 வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், வேலை வாய்ப்பு
சென்னை உயர் நீதிமன்றம், வேலை வாய்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 74 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. பணியிடங் களுக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜூனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் (Junior Grade Stenographer) மற்றும் மொழிபெயர்ப்பாளர் (Translator/Interpreter), ஜூனியர் கிளார்க் (Junior Clerk), தட்டச்சர் (Typist), ஓட்டுநர் (Driver), மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (பொது), Multi Tasking Staff (General) ஆகிய பணி இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தட்டச்சு
தட்டச்சு

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, 8, 10, 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மாதம் ரூ.18,000 முதல் ரூ.35,400 வரை பணிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 23-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in