மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் - அரசு அதிரடி உத்தரவு!

3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை
3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை

மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டு உள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற 27, 29, மற்றும் 30 ஆகிய நாட்களில் மதுரையில் அனைத்து விதமான மதுபான கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in