பொங்கல் அன்று ரூ.317.08 கோடிக்கு மது விற்பனை!
டாஸ்மாக்தி இந்து

பொங்கல் அன்று ரூ.317.08 கோடிக்கு மது விற்பனை!

மதுரை மண்டலம் நம்பர் ஒன்

பொங்கல் தினத்தன்று டாஸ்மாக் கடைகளில், ஒரேநாளில் ரூ.317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 12-ம் தேதி ரூ.155.06 காேடிக்கும், ஜனவரி 13-ம் தேதி 203.05 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றிருந்த நிலையில், பொங்கல் தினமான நேற்று ஒரேநாளி்ல் ரூ.317 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

சென்னை மண்டலத்தில் ரூ.59.28 கோடி, திருச்சி மண்டலத்தில் 65.52 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.63.87 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.68.76 கோடி, கோவை மண்டலத்தில் 59.65 கோடி என மொத்தம் ரூ.317.08 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in