குவார்ட்டர் பாட்டிலுக்கு பிப்.1 முதல் 10 ரூபாய் விலை உயர்கிறது: குடிமகன்கள் அதிர்ச்சி!

மதுக்கடை
மதுக்கடை
Updated on
2 min read

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை பிப்ரவரி 1 முதல் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மது பானங்கள்
மது பானங்கள்

தமிழ்நாட்டில் அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடைகள் மூலமாக சாதாரண வகையில் 43 பிராண்ட்களும், மீடியம் ரேஞ்சில் 128 பிரீமியம் பிராண்ட்களும், 35 வகையான பீர், 13 வகையான ஒயின்களும்  விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக விற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மதுபானங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. 2022-23 ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருவாய் 44 ஆயிரத்து 99 கோடி ரூபாய் ஆகும். டாஸ்மாக் கடைகளில் சாதாரண மதுபானங்கள் தான் அதிக அளவில் அதாவது சுமார் 40 சதவீத அளவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் குவார்ட்டர் பாட்டில் 130 ரூபாய், ஆப் பாட்டில் 260 ரூபாய், ஃபுல் பாட்டில் 520 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

அதுவே மீடியம் ரேஞ்ச் மதுபானங்கள் 160 ரூபாய் முதல் 640 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இந்த சூழலில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி வியாழன் முதல் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக  நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சாதாரண மற்றும் மீடியம் ரேஞ்ச் மதுபானங்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு 20 ரூபாயும், ஃபுல் பாட்டிலுக்கு 40 ரூபாயும் விலை உயர்த்தப்படுகிறது. அனைத்து வகை பீர் மதுபானங்களின் விலை ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.

குறிப்பாக,  இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது உயர்த்தப்படுகிறது. இது விற்பனை வரி, கலால் வரி என்ற பெயரில் அமல்படுத்தப்படும். அதனால் விலை உயர்வு மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயும் தமிழக அரசின் கஜானாவிற்கு செல்லும். 

விலை உயர்வு என்பதற்கு பின்னணியில் வரி உயர்வும், மூலப் பொருட்களின் விலை உயர்வும் முக்கிய காரணமாக இடம்பெற்றுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தங்களிடம் கொள்முதல் செய்யப்படும் மதுபான வகைகளின் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுபான ஆலை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in