ஏப்.6-ல் சட்டப்பேரவை கூட்டம்; அதிமுக வெளிநடப்பு தேவையில்லாதது!

சபாநாயகர் அப்பாவு பேட்டி
ஏப்.6-ல் சட்டப்பேரவை கூட்டம்; அதிமுக வெளிநடப்பு தேவையில்லாதது!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் தொடங்கும் என்று அனைத்து நாட்களிலும் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் உண்டு என்றும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

கடந்த 18-ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். அடுத்த நாள், அதாவது, 19-ம் தேதி உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதன் பின்னர், 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர். இதையடுத்து, அவை நடவடிக்கைகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, 'தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் 6-ம் தேதி மீண்டும் தொடங்கும். ஏப்ரல் 6-ல் தொடங்கும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அனைத்து நாட்களிலும் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் உண்டு. மார்ச் 30-ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் சட்டப்பேரவை தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என முடிவாகும்"என்றார்.

அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர், முக்கிய பணிகள் காரணமாக அவையில் இருந்து நிதியமைச்சர் எனக்கு தகவல் தெரிவித்துவிட்டே வெளியில் சென்றார். நிதியமைச்சர் வெளியில் சென்றதை காரணம் கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது தேவையில்லாதது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in