இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறேன்... மனம் மாறிய கிருஷ்ணசாமி!

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

தென்காசி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியிருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தற்போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

அதிமுக உடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி
அதிமுக உடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு, தென்காசி தனித்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அதிமுக உடனான கூட்டணி ஒப்பந்தம் இறுதியானபோது, தென்காசி தொகுதியில் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்றும், டிவி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட புதிய தமிழகம் கட்சிக்கு டிவி சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், டிவி சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தெரிவித்து விட்டது. இதையடுத்து, தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். டிவி சின்னம் கிடைக்காதால், இந்த முடிவினை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணசாமி இரட்டை இலை
கிருஷ்ணசாமி இரட்டை இலை

பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சைக்கிள், குக்கர் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஆனால், திமுக மற்றும் அதிமுக கூட்டணி மற்றும் நாம்தமிழர் கட்சி கேட்ட பம்பரம், பானை, டிவி, கரும்பு விவசாயி சின்னங்களை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதனால், மத்திய அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in