ஆண்களுக்கு மட்டும் அனுமதி; திருநீர், பிரசாதம் வெளியே எடுத்து செல்ல கூடாது... மதுரையில் வினோத திருவிழா!

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கருப்பண்ண சுவாமி திருவிழா
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கருப்பண்ண சுவாமி திருவிழா

மதுரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உச்சி கருப்பணசாமி கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோவிலில் இருந்து திருநீர் கூட வெளியே கொண்டு செல்லப்படாத வினோத பழக்கத்தை இன்றுவரையில் பொதுமக்கள் கடைபிடிக்கின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதியில் உச்சி கருப்பணசாமி திருக்கோயில் உள்ளது. 150 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு மக்கள் வழிபடுவதாக சொல்லப்படுகிறது. ஒரு சிறிய பாறை மீது சந்தனம் குங்குமம் வைத்து மாலை அணிவித்து வழிபட்டு வருகின்றனர். மேலும் ஆண்கள் மட்டும் வழிபடுவது இத்திருக்கோயிலில் வழக்கம்.

உச்சிக்கருப்பண்ண சுவாமி
உச்சிக்கருப்பண்ண சுவாமி

இந்தக் கோவிலில் உச்சி கருப்பணசாமிக்கு மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என முக்கனிகள் படைக்கப்படுகிறது. கோயிலில் சாமிக்கு முக்கனிகள் படைக்கப்பட்ட பின்னர், கோயிலுக்கு வரும் ஆண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு அங்கேயே சாப்பிட்டு செல்ல வேண்டும் என கூறுகின்றனர். மேலும் திருநீரு முதல் பிரசாதம் வரை எதுவாக இருந்தாலும் இத்திருக்கோவிலில் இருந்து வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற ஒரு வினோதமான பழக்கவழக்கம் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.

கருப்பண்ண சுவாமி
கருப்பண்ண சுவாமி

அந்த வகையில் இன்று நூற்றுக்கணக்கான ஆண்கள் மட்டும் பங்கேற்று உச்சி கருப்பணசாமிக்கு மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் முக்கணிகளை வைத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து அந்த முக்கனிகளும் கோயிலுக்கு வந்திருந்த ஆண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!

ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in