பாரதி பாஸ்கருக்கு கம்பர் விருது; நெல்லை கண்ணனுக்கு இளங்கோவடிகள் விருது!

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
பாரதி பாஸ்கர்-  நெல்லை கண்ணன்
பாரதி பாஸ்கர்- நெல்லை கண்ணன்hindu கோப்பு படம்

2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாரதி பாஸ்கருக்கு கம்பர் விருதும், நெல்லை கண்ணனுக்கு இளங்கோவடிகள் விருதும் வழங்கப்படுகிறது.

தமிழ்ச் சமுதாய உயர்வுக்கு, பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்துக்கும், சொல்லின் செல்வர் விருது சூர்யா சேவியருக்கும், சிங்கார வேலர் விருது கவிஞர் மதுக்கூர் ராமலிங்கத்துக்கும், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்hindu கோப்பு படம்

மேலும், நெல்லை கண்ணனுக்கு இளங்கோவடிகள் விருதும், பாரதி பாஸ்கருக்கு கம்பர் விருதும், மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமனுக்கும், வள்ளலார் விருது முனைவர் இரா.சஞ்சீவிராயருக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு. அரசேந்திரனுக்கும், உமறுப்புலவர் விருது நா.மம்மது என்பவருக்கும்,

கி.ஆ.பெ. விருது முனைவர் ம.இராசேந்திரனுக்கும், ஜி.யு.போப் விருது ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கும், மறைமலையடிகள் விருது சுகி.சிவம் என்பவருக்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான.அலாய்சியஸ் என்பவருக்கும், சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கும் வழங்கப்படுகிறது என்றும், இந்தாண்டு முதல் விருதுத்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in