அரசியல் அழுத்தம் காரணமாக கள்ளக்குறிச்சி எஸ்.பி விருப்ப ஓய்வா? காவல்துறை விளக்கம்!

மோகன்ராஜ் எஸ்.பி
மோகன்ராஜ் எஸ்.பி

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில்  அதுகுறித்து  பல்வேறு தகவல்கள் வெளியானது. அதற்கு காவல்துறை சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், தான்  விருப்ப ஓய்வில் செல்ல இருப்பதாக உள்துறை செயலாளர் அமுதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  மூன்று திமுக எம்எல்ஏக்கள் உட்பட ஆளும் கட்சியினர் தரும் அழுத்தம் காரணமாக அவரால் அங்கு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அதனால் தான் அவர் விருப்ப  ஓய்வு கேட்கிறார் என்பதாக செய்திகள் பரவியது.

அதனால்  இதை மறுத்து காவல்துறை தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 'மோகன்ராஜ்  கடந்த ஜனவரி-2023 முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்று இதுநாள் வரை தனது பணியில் சிறப்பாக செயல்பட்டு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றி வருகிறார். கடந்த 1987-ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாநகரம் மற்றும் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார்.

மோகன்ராஜ்
மோகன்ராஜ்

மேலும் காவல்துறையில் சுமார் 36 வருடங்களாக செம்மையாக பணியாற்றி வருகின்ற மோகன்ராஜ் 31.05.2024 அன்றுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் பணியின்பால் முழு திருப்தி அடைந்த காரணத்தினாலும், உடல் நிலையை கருத்தில் கொண்டும் தனது சொந்த சூழ்நிலையின் காரணமாக விருப்ப ஓய்வு கோரி உள்ளார்.

இது சம்மந்தமாக, பல்வேறு சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வருகின்றனர். இச்செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது'  என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in