ரூ.10,000 அபராதம்; 2 ஆண்டுகள் வழக்கு தொடர தடை!

- மனுதாரரை தெறிக்கவிட்ட நீதிபதிகள்
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் சொத்துகளை முடக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஆதாரமின்றி வழக்கு தொடர்ந்ததாக கூறி மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம் விதித்ததோடு, 2 ஆண்டுகள் வழக்கு தொடரவும் தடை விதித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “அனைத்து துறைகளிலும் ஊழல், பிறப்பு முதல் இறப்புச் சான்று வரை பெற கையூட்டு கொடுக்க வேண்டும். ஆகவே, அனைத்து அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது, கொடுப்பது குற்றம் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மேலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை முடக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, பொதுப்படையான கொள்கையுடன் எந்த ஆய்வுமின்றி விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, 2 ஆண்டுகளுக்கு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in