‘சமூகநீதி வரலாற்றில் மேலும் பல மைல்கற்களைப் பதிக்க வாழ்த்துகள்!’

இரண்டாவது முறையாக திமுக தலைவராகியிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்து
‘சமூகநீதி வரலாற்றில் மேலும் பல மைல்கற்களைப் பதிக்க வாழ்த்துகள்!’

திமுக தலைவராக இரண்டாவது முறையாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

சென்னை அமைந்தகரையில் இன்று நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் எம்.எச்.ஜவாஹிருல்லா. அதில், ‘தனது 14 வயது முதலே பொது வாழ்க்கையைத் தொடங்கி படிப்படியாகப் பல்வேறு பொறுப்புகளை வகித்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழி நின்று திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கவும் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சளைக்காமல் உழைத்துவரும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்தியாவும் தமிழ்நாடும் பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் பாசிசத்திற்கு எதிராக மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் ஆற்றல் மிக்கவராக தளபதி அவர்களே திகழ்கிறார்’ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ‘சமத்துவம் சகோதரத்துவம் ஜனநாயகம் போன்ற நேரிய வழியில் தமிழ்ச் சமூகத்தை இன்னும் வீரியமாக வழிநடத்த, சமூகநீதி வரலாற்றில் மேலும் பல மைல்கற்களைப் பதிக்க, சமயச் சிறுபான்மைச் சமுதாயங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காத்திட, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு அவர்களின் மக்கள் பணியில் தோளோடு தோள் நிற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு இன்னும் வீரியமாக வளர்ச்சியும் எழுச்சியும் பெற்றிட உளமார வாழ்த்துகிறேன்’ என ஜவாஹிருல்லா தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in